ஆகஸ்ட் 23ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்ட அதிமுக செயற்குழு

சமீபத்தில் திமுக செயற்குழு கூட்டம் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்க சென்னை அண்ணா அறிவாலயத்தில் குடியது. இந்த நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக்கழகத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதிலும் இருந்து அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென இந்த செயற்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக செயற்குழு கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு இதோ:

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *