அருவி’ படத்தை எதிர்க்க மாட்டேன்: ‘சொல்வதெல்லாம் உண்மை’ லட்சுமி ராமகிருஷ்ணன்

தமிழ் திரையுலகமே ‘அருவி’ படத்திற்கு பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் இந்த படத்தை ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நடத்தி வநத லட்சுமி ராமகிருஷ்ணனும் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்

‘அருவி’ படத்தின் ஹைலைட்டே அந்த படத்தில் உள்ள அரைமணி நேர ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ என்ற நிகழ்ச்சியின் காட்சிகள்தான். அதில் டிஆர்பிக்காக தொலைக்காட்சியினர் செய்யும் ஏமாற்று வேலைகள் தோலுரித்து காட்டப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தை கண்டிப்பாக லட்சுமிராமகிருஷ்ணன் எதிர்ப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ‘அருவி’ படத்தை அவர் பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது:

பல மாதங்களுக்கு முன் தணிக்கை ஆன போது இந்த படம் பற்றி தெரிந்து கொண்டேன். படம் பார்த்தவர்கள், இது அற்புதமான படம். தயவு செய்து எதுவும் எதிர்வினையாற்ற வேண்டாம் என்றார்கள். நல்ல இயக்குநர், நிகழ்ச்சிப் பின்னணியில் நல்ல படத்தை எடுத்துள்ளார். என் நிகழ்ச்சியை கேலி செய்தாலும் இது நல்ல படமே’ என்று கூறியுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *