அருவருப்பான அசைவுகளை விட டீசண்ட்டான நிர்வாணம் மேல். ராதிகா ஆப்தே

radhika apteபிரகாஷ்ராஜ் நடித்த தோனி, கார்த்தி நடித்த ‘பிரியாணி’ ஆகிய படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்து வந்த நடிகை ராதிகா ஆப்தே, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’ படத்தில் நடித்தது முதல் அகில உலக ஸ்டார் ஆகிவிட்டார். ஏற்கனவே பல சர்வதேச படங்களில் கிளாமராக நடித்திருந்த அவர் சமீபத்தில் ஒரு நிர்வாண காட்சியில் நடித்ததாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நிர்வாண காட்சியில் நடித்தது குறித்து ராதிகா ஆப்தே ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியின் விபரம் இதோ: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டு படம் ஒன்றுக்காக இதே போன்று நிர்வாணமாக நடித்த காட்சி லீக் ஆனபோது ரொம்பவும் அப்செட் ஆனேன். ஆனால் தற்போது லீக் ஆன நிர்வாண காட்சி குறித்த தகவல் வந்ததும் எனக்கு எவ்விதமான ஆத்திரமும் ஏற்படவில்லை. இம்முறை எனக்கு பக்குவம் ஏற்பட்டுவிட்டதால் இதுவும் ஒருவகையில் நல்லதே என்று எண்ண தோன்றுகிறது.

நான் நடித்துள்ள நிர்வாண காட்சிகளை படத்தின் கதையோடு இணைத்து கலைக்கண்ணோடு பார்த்தால் அருவருப்பு இருக்காது. ஒருசில நடிகைகள் கவர்ச்சியாக ஆடை அணிந்து, அருவருப்பான அசைவுகள் கொடுப்பதை காட்டிலும் டீசண்ட்டான நிர்வாணம் மேல் என்றுதான் நான் நினைக்கின்றேன். மேலும் எனது அந்த காட்சி குறித்து விமர்சனம் செய்பவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். Parched படம் ரிலீஸ் ஆன பின்னர் நான் நடித்துள்ள நிர்வாண காட்சி எந்த அளவுக்கு படத்தின் கதையோடு ஒன்றியுள்ளது என்று பார்த்த பின்னர் விமர்சனம் செய்ய வேண்டும் என்பதுதான். என்று கூறியுள்ளார்.

ராதிகா ஆப்தேவின் இந்த பேட்டி, அவரது நிர்வாண காட்சியை சர்ச்சைக்கு உண்டாக்கியவர்களின் வாயை அடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *