அருண்ஜெட்லி உடல்நலக்குறைவால் மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றம்

பாரத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த நிலையில் இதுவரை பலமுறை மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சிறுமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் வகித்து வந்த நிதித்துறை பியூஷ் கோயல் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அருண் ஜெட்லி உடல் நலம் தேறிவரும் வரை இந்தத் துறை அவர் வசம் இருக்கும் என்றும் பியூஷ் கோயல் ஏற்கனவே கவனித்து வரும் ரயில்வே துறையுடன் நிதித்துறையையும் இனி கூடுதலாக கவனிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது

இதேபோல், ஸ்மிரிதி ரானி இடம் இருந்த தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சரான ராஜ்வர்தன் ரத்தோர் வசம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. வெங்கையா நாயுடு துணை குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின் அவர் வசம் இருந்த தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை ஸ்மிரிதி ரானிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *