அரியர் தேர்வு விதிகள் மாற்றம்: மாணவர்கள் கோரிக்கையை ஏற்றது அண்ணா பல்கலை

அரியர் தேர்வு எழுதும் விதிகளை தளர்த்த வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, அண்ணா பல்கலைக்கழகம் தற்போது அரியர் விதிகளை தளர்த்தியுள்ளது.

இதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் 2000-ஆம் ஆண்டில் படிப்பை முடித்த அனைத்து மாணவர்களும் தங்களது அரியர் தேர்வை வருகிற 2019 நவம்பர், 2020 ஏப்ரலில் நடைபெறும் பருவத்தேர்வுகளுடன் எழுதிக் கொள்ளலாம்

அதேபோல் அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரிகளில் 2000ஆம் ஆண்டு முதல் படிப்பை முடித்தவர்கள் மூன்றாவது செமஸ்டர் முதல் எட்டாவது செமஸ்டர் உள்ள அரியர் தேர்வுகளை 2019 நவம்பர் மற்றும் 2020 ஏப்ரலில் எழுதிக்கொள்ளலாம்.

இதுகுறித்த கூடுதல் விபரங்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் ஜூன் 2-வது வாரத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *