அரசியல்ரிதியாக ஸ்டாலின் இன்னும் வளரவில்லை: தமிழிசை

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் குறித்து நேற்று பேட்டியளித்த திமுக பொருளாளர் துரைமுருகன், ‘தமிழிசையை எனக்கு சின்ன குழந்தையில் இருந்தே தெரியும், அவர் இன்னும் வளரவே இல்லை என்று கூறினார்.

இதற்கு பதலளித்துள்ள தமிழிசை செளந்திரராஜன், ‘அரசியல் ரீதியாக தாம் வளரவில்லை என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கருதினால், அவரது தலைவர் மு.க.ஸ்டாலினும் வளரவில்லை என்பதே தமது கருத்து என பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் தமிழகத்திற்கு கிருஷ்ணா நதிநீர் கிடைக்க அனுமதி பெற்று தரப்பட்டிருப்பதாக கூறினார். பாஜகவின் வளர்ச்சி தமிழக அரசியல் கட்சியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறிய அவர், மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு பல திட்டங்களை கொண்டுவந்திருப்பதாகவும் தமிழிசை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *