அரசியலை விட்டே விலகத்தயார்! எச்.ராஜாவுக்கு அதிமுக எம்பி சவால்

இந்து கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அமைச்சர் உள்பட பலர் அபகரித்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் தான் ஒரே ஒரு சதுர அடி கோவில் நிலத்தை அபகரித்ததாக நிரூபித்தால் எம்பி பதவியை ராஜினாமா செய்வது மட்டுமின்றி அரசியலை விட்டே விலகத்தயார் என அதிமுக எம்பி அருண்மொழிதேவன் பகிரங்க சவால் விட்டுள்ளார்.

மேலும் இந்து மதம் என்றால் பாஜகவுக்கு மட்டுமே சொந்தம் என்பது போன்றும், விநாயகரை இவர் மட்டுமே வழிபடுவது போன்றும் எச்.ராஜா பேசி வருகிறார். அதிமுகவினர் என்ன வெளிநாட்டில் இருந்து வந்தவர்களா? அல்லது விநாயகரை கும்பிடாதவர்களா?

எனது சவாலுக்கு எச்.ராஜா என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க போகிறேன் என்றும் அருண்மொழிதேவன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *