அமைச்சருக்கு ஷூ லேஸ் கட்டிவிட்ட அரசு அதிகாரி: நெட்டிசன்கள் கண்டனம்
உத்தர பிரதேச அமைச்சர் லட்சுமி நாராயணன் நேற்று யோகா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அவருக்கு அரசு அதிகாரி ஒருவர் ஷூ லேஸ் கட்டிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தன்னுடைய ஷூ லேஸையே கட்ட முடியாத ஒருவர் மக்களுக்கு என்ன செய்துவிட போகிறார்? என்ற கேள்வியை டுவிட்டரின் மூலம் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். அரசு அதிகாரிகளை அமைச்சர்கள் தங்கள் வேலைக்காரர் போல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.