shadow

அமைச்சரின் ஆடியோவிற்கும் அமமுகவிற்கும் சம்மந்தம் உண்டா? தங்கத்தமிழ்ச்செல்வன் பதில்

நேற்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரின் ஆடியோ ஒன்று வெளியாகி தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் சர்ச்சைக்குரிய விஷயம் ஒன்று இருந்ததால் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவியது. இந்த நிலையில் அந்த ஆடியோவில் உள்ள குரல் தன்னுடைய குரல் இல்லை என்றும் இந்த விஷயத்தை தான் சட்டரீதியாக அணுக இருப்பதாகவும் அமைச்சர் ஜெயகுமார் விளக்கமளித்தார். மேலும் அதிமுக ஆட்சிக்கும் தனக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் ஒருசிலர் இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்

இந்த நிலையில் இந்த ஆடியோ குறித்து தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்செல்வன் விளக்கம் அளித்தபோது, ஜெயகுமார் குறித்த ஆடியோவிற்கும் அம்முகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மத்திய அமைச்சர் ஒருவர் தன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணையை எதிர்கொள்கிறார். அந்த அறிவு ஜெயகுமாருக்கு ஏன் இல்லை. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னை குற்றமற்றவர் என்பதை ஜெயகுமார் நிரூபிக்க வேண்டும்’ என்று கூறினார்.

மேலும் ஊடகங்களில் வெளியாகும் இந்த செய்தியின் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்கத்தமிழ்ச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply