அமேசானில் ஐபோன் விலை ரூ.10 ஆயிரம் தள்ளுபடி

அமேசான் வலைத்தளத்தில் ஆப்பிள் ஃபெஸ்ட் சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐபோன் மாடல்கள், ஆப்பிள் வாட்ச், மேக் உள்ளிட்ட சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ஆப்பிள் ஃபெஸ்ட் எனும் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. மார்ச் 6-ம் தேதி துவங்கிய சிறப்பு விற்பனை மார்ச் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆப்பிள் ஐபோன்கள், ஆப்பிள் வாட்ச், மேக் மற்றும் ஆப்பிள் சாதனங்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் எக்சேஞ்ச் சலுகை, வட்டியில்லா மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் X 64 ஜிபி விலை ரூ.81,999 முதல் துவங்குகிறது. இதேபோன்று 256 ஜிபி ஐபோன் X விலை ரூ.93,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய பட்ஜெட் அறிவிப்புக்கு முன் நிர்ணயம் செய்யப்பட்ட விலையே அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் அறிவிப்புக்கு பின் 64 ஜிபி ஐபோன் X விலை ரூ.95,390 மற்றும் 256 ஜிபி விலை ரூ.1,08,930 வரை அதிகரிக்கப்பட்டது. ஆப்பிள் ஃபெஸ்ட் விற்பனையில் ஐபோன் 8 விலை ரூ.10,000 குறைக்கப்பட்டு ரூ.54,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. 256 ஜிபி விலை ரூ.4,000 குறைக்கப்பட்டு ரூ.69,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இரண்டு மாடல்களுக்கும் கூடுதலாக ரூ.16,257 வரை எக்சேஞ்ச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் சிறப்பு விற்பனையில் 32 ஜிபி ஐபோன் 7 பட்டியலிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் 32 ஜிபி ஐபோன் 7 மாடலை ரூ.41,999க்கு வாங்கிட முடியும். இத்துடன் எக்சேஞ்ச் சலுகையின் கீழ் ரூ.16,257 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சற்று விலை குறைந்த மாடல்களை பொருத்த வரை ஐபோன் எஸ்இ 32 ஜிபி விலை ரூ.17,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது, 32 ஜிபி ஐபோன் 6 விலை ரூ.23,999, 32 ஜிபி ஐபோன் 6எஸ் விலை ரூ.33,999 மற்றும் ஐபோன் 6எஸ் பிளஸ் 32 ஜிபி விலை ரூ.38,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஐபோன் மாடல்கள் மட்டுமின்றி மேக்புக் ஏர் 13.3 இன்ச் மாடல் ரூ.19,570 வரை குறைக்கப்பட்டு ரூ.57,630க்கு விற்பனை செய்யப்படுகிறது. 9.7 இன்ச் ஐபேட் ப்ரோ ரூ.47,118க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது முந்தைய விலையை விட ரூ.14,782 வரை குறைவு ஆகும். இத்துடன் ஆப்பிள் வாட்ச் 3 ரூ.30,900-க்கு விற்பனை செய்யப்படுதிறது.

மேலும் அமேசான் சார்பில் தள்ளுபடி மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட சாதனங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *