அமேசானிலும் சாதனை செய்த அஜித் படம்

அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி வெளியாகி 50வது நாளை நெருங்கி வசூல் சாதனை செய்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த 25ஆம் தேதி இந்த படம் டிஜிட்டலில் வெளியானது.

அஜித் ரசிகர்களின் எதிர்ப்பையும் மீறி இந்த படம் அமேசான் பிரைம் டைமில் வெளியானாலும் அதிலும் ஒரு சாதனையை புரிந்து கம்பீரமாக நிற்கிறது விஸ்வாசம். ஆம், அமேசான் பிரைம் டைமில் ஒரே நாளில் அதிக நபர்கள் பார்த்த திரைப்படம் என்ற சாதனையை விஸ்வாசம் பெற்றுள்ளது.

மேலும் இந்த படத்தை ஏற்கனவே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலும் திருட்டுத்தனமாக வெளியாகிவிட்டது. தற்போது அமேசான் தளத்திலும் வெளியாகிவிட்டது. அப்படி இருந்தும் இன்னும் ரிலீஸான பெரும்பாலான திரையரங்குகளில் சுமார் 50%க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் திரையிடப்பட்டு வருவதும் ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது. அஜித்தே நினைத்தலும் இதுபோன்ற இன்னொரு வெற்றியை கொடுக்க முடியுமா? என்ற நிலையை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *