அமெரிக்க ஆபாச இணையதளத்தில் சென்னை கல்லூரி மாணவிகளின் புகைப்படங்கள்: அதிர்ச்சி தகவல்

சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் படித்த மாணவிகளின் புகைப்படங்கள் அமெரிக்க ஆபாச இணையதளத்தில் உள்ளதாகவும், அவற்றை உடனே நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றின் பிரிவு உபச்சார விழாவில் எடுக்கப்பட்ட மாணவிகளின் புகைப்படங்களை மர்ம நபர்கள் சிலர் அமெரிக்க ஆபாச இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவிகளின் மொபைல் எண்களையும் , புகைப்படங்களோடு இணைத்துள்ளதால் சம்பந்தப்பட்ட மாணவிகள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த புகாரை அடுத்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *