shadow

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் சென்னை பெண்?

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் டிரம்ப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரீஸ் என்பவர் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய வம்சாவளி மற்றும் சென்னைக்யை சேர்ந்த கமலா ஹாரீஸ் தற்போது முதல் பெண் செனட் சபை எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜனநாயக கட்சி சார்பில் துளசி கப்பார்ட் எம்பி போட்டியிடக்கூடும் என்றும் தகவல்கள் வெளி வந்தன. ஆனால் கமலாஅ ஹாரீசுக்குக் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது

கலிபோர்னியா மாகாணம் ஓக்லாந்தில் பிறந்த கமலாவின் பூர்வீகம் சென்னைதான். இவரது தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் பிறந்தவர். இவர் ‘பெண் ஒபாமா’ என அமெரிக்காவில் பெயர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply