அமிர்தசரஸ் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 61ஆக உயர்வு

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தரஸ் நகரில் தசரா கொண்டாட்டத்தின்போது வேகமாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு 61 ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் சிகிச்சை பெற்று வருபவர்களின் ஒருசிலரின் நிலை அபாய கட்டத்தில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்திற்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பல்ல என்றும், இந்த விழாவை நடத்திய உள்ளூர் ஏற்பாட்டாளர்களின் தவறினால்தான் இந்த விபத்து நடந்துள்ளதாகவும் ரயில்வே துறை விளக்கமளித்துள்ளது. இந்த நிலையில் ரயிலின் டிரைவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *