அப்பலோ மருத்துவமனைக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் எச்சரிக்கை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் கடந்த சில மாதங்களாக விசாரணை செய்து கொண்டு வருகிறது.

இந்த விசாரணை இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் இந்த விசாரணையின் அறிக்கை தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சென்னை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் குறிப்பிட்ட காலத்தில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகவில்லை என தெரிகிறது.

இதனால் சென்னை அப்பலோ மருத்துவமனைக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *