அனைவரும் எதிர்பார்த்த தனிநபர் வருமான வரி சலுகை: நிதியமைச்சர் அதிரடி அறிவிப்பு

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அனைவரும் எதிர்பார்த்த தனிநபர் வருமான வரி குறித்த சலுகைகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தனி நபர் வருமான வரியில் நிறைய சலுகைகள் தரப்படுகின்றன, வருமான வரி மேலும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஆண்டுக்கு, 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோர் இனி 10 சதவீதம் வருமான வரி செலுத்தினால் போதும்.

வரிச்சலுகை குறித்த முழுவிபரம் இதோ:

ரூ.5 லட்சம் – 7.5 லட்சம் 20% இருந்து 10% ஆக குறைப்பு!

ரூ.7.5 லட்சம் – 10 லட்சம் 20% இருந்து 15% ஆக குறைப்பு!

ரூ.10 லட்சம் – 12.5 லட்சம் 30% இருந்து 20% ஆக குறைப்பு!

ரூ.12.5 லட்சம் – 15 லட்சம் 30% இருந்து 25% ஆக குறைப்பு!

Leave a Reply