அனுமதி பெறாத பேனர்களை அச்சடித்தால் அச்சகத்தின் உரிமம் ரத்து: எச்சரிக்கை அறிவிப்பு

சென்னையில் அனுமதிபெறாத பேனர்களை அச்சடித்து தந்தால் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, அச்சக கடைக்கு சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாண்புமிகு நீதிமன்றத்தின் அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கைகளை மீறி சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 பிரிவின்படி பெருநகர சென்னை மாநகராட்சி தொழில் உரிமம் விதிகளுக்கு மாறாக உரிமம் பெறாமல் பதாதைகள் அமைக்கும் நபர்களுக்கு அச்சடிக்கும் பணியினை மேற்கொள்ளும் அச்சகத்தின் உரிமை ரத்து செய்யப்படுவதுடன் மூடி சீல் வைக்கப்படும் என ஆணையர் திரு பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *