அனிருத் இன்று வெளியிடும் முக்கிய தகவல் என்னவாக இருக்கும்?
இன்று மாலை 6 மணிக்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் படம் குறித்த ஒரு முக்கிய ரகசியத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என சினிமா ரசிகர்கள் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘விக்கி டோனார்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். தன்யா ஹோப் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் விவேக் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்
இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டன. இதன் முதல் பணியாக இன்று இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை அனிருத் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அனேகமாக இந்த படத்தின் டைட்டிலை அவர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.