அத்வானி-மம்தாபானர்ஜி திடீர் சந்திப்பு! புதிய கூட்டணியா?

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்களை சற்றுமுன்னர் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளது இந்திய அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை தேசிய அளவில் அமைக்கும் முயற்சியில் இருப்பவர் மம்தா பானர்ஜி. அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளில் அதிருப்தியுடன் இருப்பவர் எல்.கே.அத்வானி. இந்த நிலையில் மம்தா பானர்ஜி, அத்வானியை இன்று சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்வானி தனிக்கட்சி ஆரம்பிப்பாரா? அல்லது அகில இந்திய அளவில் உருவாகும் தேசிய கூட்டணிக்கு தலைமை பொறுப்பை வகிப்பாரா? என்பது உள்பட பல்வேறு யூகங்களை இந்த சந்திப்பு ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *