அதையும் சேர்த்து சொல்லுங்க கலெக்டர் சார்! நெட்டிசன்கள் கேள்வி

சென்னை மாவட்டத்தில் அங்கீகாரமின்றி 331 பள்ளிகள் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை பெற்றொர்கள் தவிர்க்க வேண்டும் என்றும், தொடர்ந்து தடையின்மைச் சான்று, அங்கீகாரமின்றி செயல்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அங்கீகாரமின்றி செயல்படும் 331 பள்ளிகள் எவை எவை என்று தெரிந்தால்தானே அந்த பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்காமல் இருக்க முடியும். எனவே அந்த பள்ளிகள் எவை எவை என்றும் மக்கள் அனைவருக்கும் தெரிவியுங்கள் கலெக்டர் சார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த கோரிக்கையை ஏற்று சென்னை கலெக்டர் அந்த பள்ளிகளின் பெயர்களை அறிவிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply