அதிரடியாக குறையும் தங்கம்! முதலீடு செய்ய இப்போது சரியான நேரமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.29,072 என இன்று விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் தங்கம் ஒரு சவரன் ரூ.30 ஆயிரத்திற்கும் அதிகம் இருந்த நிலையில் தற்போது ஒரே வாரத்தில் ரூ.1000 குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இனி வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை குறையுமா? என்ற எதிர்பார்பில் வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கி காத்திருப்பதால் தங்கத்தில் முதலீடு செய்ய இது சரியான தருணம் அல்ல, இன்னும் கொஞ்சம் பொறுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தங்கத்தில் நேரடியாக முதலீடு செய்யாமல், கோல்ட் ஈபிஎப், ஆன்லைன் கோல்ட் ஆகியவற்றில் முதலீடு செய்வதே சிறந்தது என்றும் முதலீட்டு ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.,

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *