shadow

அதிமுக-பாஜக கூட்டணியை ஒப்பிட்டு மணமக்களை வாழ்த்திய உதயநிதி

அதிமுக, பாஜக கூட்டணி போன்று மணமக்கள் அடிமையாக இருக்க கூடாது என்று மணமக்களுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கே புதுப்பட்டியில் திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகி இல்ல திருமணத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியபோது, ‘மணமக்கள் அதிமுக பாஜக கூட்டணி போன்று அடிமையாக இருக்கக் கூடாது என்றும், ஒருவருக்கு ஒருவர் உரிமையை விட்டுக் கொடுக்காமல் வாழ வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

உதயநிதியின் இந்த அறிவுரைக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறிய எஸ்வி சேகர், ‘ஆமாம். திமுக மதிமுக மாதிரி கூட்டணியா இருந்தா எப்படி வேணா அடிச்சுக்கலாம், அசிங்கமா திட்டிக்கலாம். பிரிஞ்சு வேற கூட்டணிக்கு போய் வாழ்ந்திட்டு மறுபடியும் வந்து சேந்துக்கலாம். முன்னோர் பெரியோர் அதானே சொல்லிக்கொடுத்திருக்காங்க. என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *