அதிமுக, திமுக இல்லாத 3-வது அணி: கமல்ஹாசன்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, திமுக அணிகளில் இணையாத கட்சிகளை ஒருங்கிணைத்து 3-வது அணி அமைய வாய்ப்பு உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சரத்குமார் கட்சி, கமல் கட்சி, தினகரன் கட்சி, வாசன் கட்சி, போன்ற கட்சிகள் இதுவரை அதிமுக, திமுக கூட்டணியில் இணையவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை

அதேபோல் திமுக கூட்டணியில் அதிருப்தி ஏற்பட்டால் மதிமுக பிரிந்து வந்து இந்த 3வது கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தேமுதிகவும் இரு அணிகளில் இணையவில்லை என்றால் மூன்றாவது அணியில் கலந்து கொள்ளும். இதனைத்தான் சூசகமாக கமல் கூறியுள்ளதாக தெரிகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *