அதிமுக, திமுகவில் வாரிசு வேட்பாளர்கள்

குடும்ப அரசியல் என்பது திராவிட கலாச்சாரத்தில் ஊறிப்போன ஒன்றாக இருந்து வரும் நிலையில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் திமுக, அதிமுக என இரண்டு பிரதான கட்சிகளும் சுமார் மூன்றில் ஒரு பங்கு வேட்பாளர்களை வாரிசுகளையே தேர்வு செய்துள்ளனர்.

திமுக வாரிசு வேட்பாளர்கள் விபரம்

1. தூத்துகுடி: கருணாநிதியின் மகள் கனிமொழி
2. வடசென்னை: ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி
3. மத்திய சென்னை – முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறன்
4. தென்சென்னை- தங்கபாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண்டியன்
5. வேலூர் – துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்
6. கள்ளக்குறிச்சி – பொன்முடி மகன் கவுதம சிகாமணி
7. கடலூர்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மகன் கதிரவன்

அதிமுக வாரிசு வேட்பாளர்கள் விபரம்:

தேனி – துணை முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம் மகன் ரவீந்திரநாத் குமார்
தென் சென்னை – அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன்
மதுரை – ராஜன் செல்லப்பா மகன் ராஜசத்யன்
நெல்லை – பி.எச்.பாண்டியன் மகன் மனோஜ்பாண்டியன்

இந்த நிலையில் வாரிசு அரசியல் செய்வதாக இரு கட்சிகளும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply