அதிமுக-காங்கிரஸ், திமுக-பாஜக: மாறுகின்றதா கூட்டணி?

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருக்கும் நிலையில் தமிழகத்தின் முக்கிய கூட்டணியான திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் பெரும் மாறுதல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

திமுக மற்றும் காங்கிரஸ் இடையே புகைச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது எனவே இந்த இரு கூட்டணிகளும் அப்படியே மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது

அதாவது அதிமுக காங்கிரஸ் கட்சியுடனும், திமுக பாஜகவுடனும் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இப்படி ஒரு கூட்டணி ஏற்பட்டால் இதுவரை விமர்சனம் செய்ததெல்லாம் என்ன ஆகும் என்பதும் மக்கள் தான் முட்டாள்களாக போகிறார்கள் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply