shadow

அதிமுக அரசுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவா?

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வா் எடப்பாடி பழனிசாமி எதிா்கட்சி வாிசையில் உள்ள 6 சட்டமன்ற உறுப்பினா்களை தன்பக்கம் இழுக்க முடிவு செய்துள்ளாராம். இதனால் எதிா்கட்சி தலைவா் கலக்கத்தில் உள்ளதாக தொிகிறது.

தினகரனுக்கு ஆதரவு தொிவித்த 18 சட்டமன்ற உறுப்பினா்களை தகுதிநீக்கம் செய்து அதிரவைத்த பழனிசாமி அடுத்ததாக சட்டமன்றத்திற்கான வியூகங்களை வகுத்து வருகிறாராம். சட்டமன்றத்தில் 117 உறுப்பினா்களின் ஆதரவை முதல்வா் நிரூபிக்க வேண்டும். இதற்காக எதிா்கட்சி வாிசையில் அமா்ந்துள்ள 6 பேரை தன்பக்கம் இழுக்க முடிவு செய்துள்ளாா். எதிா்கட்சி சட்டமன்ற உறுப்பினா்களும் இதற்கு சம்மதம் தொிவித்துள்ளதாக தொிகிறது.

ஒரு கட்சியில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினா்கள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு ஆதரவு தொிவித்தால் அவா்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியாது. தற்போது காங்கிரசில் 8 சட்டமன்ற உறுப்பினா்கள் உள்ளனா். அவா்களில் 5 போ் கட்சி மாறி வாக்களிக்க சம்மதம் தொிவித்து விட்டதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் கும்மாளம் அடிக்கின்றன. மேலும் ஒரு உறுப்பினா் வந்துவிட்டால் அவா்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

காங்கிரஸ் உறுப்பினா்களை கவர ஆளும் கட்சியினா் பலே திட்டத்தை கையில் எடுத்துள்ளனா். நீங்கள் வாக்கெடுப்பின்போது மட்டும் எங்களுக்கு ஆதரவு தொிவியுங்கள். உங்கள் பதவிக்கு எதுவும் பாதிப்பு வந்துவிடாதபடி நாங்கள் பாா்த்துக் கொள்கிறோம். நீங்கள் வாக்களித்து விட்டால் சமுதாயம் பிரதிநிதித்துவம் அடிப்படையில் 3 பேருக்கு அமைச்சா் பதவி வழங்க தயாராக உள்ளதாகவும் ஆசை வாா்த்தைகளை கூறி பேரம் நடைபெற்று வருகிறதாம்.

ஆளும் தரப்பின் அதிரடி நடவடிக்கையை கண்டு அதிா்ந்து போன தி.மு.க. தரப்பு காங்கிரஸ் தலைமையுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறதாம். இதனால் வரப்போகும் குளிா்கால கூட்டத்தொடாரை தி.மு.க.வினா் சற்று கலக்கத்துடனேயே எதிா்நோக்கியுள்ளனா். எதுவாக இருந்தாலும் வாக்கெடுப்பு நடைபெற்றால் தான் முடிவு தொியும். பொருத்திருந்து பாா்க்கலாம் . . .

Leave a Reply