அதிமுகவை அடகு வைத்தவர்களுக்கு 2 மருத்துவர்கள் ஜால்ரா: மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு,.க.ஸ்டாலின் தற்போது தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வெள்ளம் திரண்டுள்ளது

இந்த நிலையில் ஊழல்கள்! கொடநாடு கொள்ளை! கொடநாடு கொலை – ஆகியவற்றில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, அ.தி.மு.க-வை பிரதமர் மோடி – அமித்ஷாவிடம் அடகு வைத்தவர் தான் எடப்பாடி! இவருக்கு ஜால்ரா அடிக்க இரு மருத்துவர்கள் சேர்ந்திருக்கிறார்கள்! அவர்களுக்கும் சேர்த்து தேர்தல் களத்தில் பாடம் புகட்டுவோம்! என்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசினார்

மேலும் பிரதமர் மோடி அவர்களை இனி செளகிதார் மோடி என அழைக்க வேண்டுமாம்! ஆம், அவர் செளகிதார்தான்.!

மதவாத தீய சக்திகளுக்கு, எடப்பாடி பழனிசாமி அரசின் ஊழல்களுக்கு, குட்கா ஊழலுக்கு, அ.தி.மு.க என்ற மைனாரிட்டி அரசுக்கு, மக்கள் விரோத தமிழக அரசுக்கு அவர்தான் செளகிதார்’ என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *