அதிமுகவுக்கு எதிராக களமிறங்கும் கமல் ரஜினி அஜித் விஜய்?

அதிமுக தலைமை இதுவரை ரஜினியை நேரடியாக விமர்சனம் செய்யாமல் இருந்த நிலையில் தற்போது தமிழக முதல்வரே ரஜினியை விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளார்

ஏற்கனவே கமல்ஹாசன் உள்பட பல நடிகர்களை அதிமுக அமைச்சர்கள் விமர்சனம் செய்து வருவதும், பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது பிரச்சனைகள் கொடுப்பதும் தொடர்ந்து வருகின்றது

அதுமட்டுமின்றி நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தையும் முடக்கி தனி அதிகாரியை நியமனம் செய்ததில் முன்னணி நடிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவும், பாஜகவுக்கு பதிலடி கொடுக்கவும் கமல் ரஜினி இருவரும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது
இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இவர்களுக்கு ஆதரவாக அஜித் மற்றும் விஜய் களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது

ரஜினிஉஏ நேரடியாக சென்று அஜித் மற்றும் விஜய் உடன் பேசினால் கண்டிப்பாக அவர்கள் மறுக்க மாட்டார்கள் என்றும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு எதிராக கமல் ரஜினிம் விஜய்ம் அஜித் ஆகிய நால்வரும் சேர்ந்தால் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்றும் கூறப்படுகிறது

இப்படி ஒரு மாயாஜாலம் தமிழக அரசியலில் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *