அதிமுகவுக்கு ஆதரவு: தேர்தல் கால அரசியல்வாதி கார்த்திக் முடிவு

தேர்தல் நேரத்தில் மட்டுமே அரசியல் செய்யும் நடிகர் கார்த்தின் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து. தனது ஆதரவை தெரிவித்ததுடன், அதிமுக கூட்டணிக்கு பிரசாரம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தேமுதிகவும் கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பும் விடுத்தார்.

கடந்த சில வருடங்களாக தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் செய்துவிட்டு பின்னர் அடுத்த தேர்தல் வரை காணாமல் போகும் பார்ட் டைம் அரசியல்வாதி நடிகர் கார்த்திக், தற்போது அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளார்.

சினிமாவில் ஒரு காலத்தில் இவர் ஹீரோவாக இருந்தாலும் அரசியலை பொருத்தவரையில் இவர் காமெடியனாகவே பார்க்கப்படுகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *