shadow

அதிசயம் ஆனால் உண்மை. பெட்ரோல் விலை இன்று ஏறவில்லை

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தினந்தோறும் மாறிக்கொண்டே இருக்கின்றது என்று கூறுவதை விட உயர்ந்து கொண்டே இருக்கின்றது என்று கூறலாம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக தினசரி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் இன்று அதிசயமாக விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையே உள்ளது.

செப்டம்பர் 26ம் தேதி அதாவது இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் எந்த விலை உயர்வும் இல்லாமல் நேற்றைய விலையான 72.99 ரூபாய்க்கும், டீசல் 4பைசாக்கள் குறைந்து 61.81ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை நிலவரம் சென்னைக்கு மட்டுமே ஆகும். மற்ற மாவட்டங்களில் விலையில் சிறிய மாற்றங்கள் இருக்கும்.

Leave a Reply