அதர்வா அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

சமீபத்தில் வெளியான அதர்வா நடித்த ‘பூமராங்’ திரைப்படம் நல்ல வசூலை தந்த நிலையில் அவருடைய அடுத்த படமான ‘100’ திரைப்படம் வரும் மே 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அதர்வா போலீஸ் கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் படம் என்றும், இந்த படத்தை ‘டார்லிங்’ பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

அதரா, ஹன்சிகா, யோகிபாபு, ராதாரவி, ராஜ்கிரண், ரம்யாகிருஷ்ணன், ஊர்வசி, மதுமிதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ட்ரீம்வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

Leave a Reply