shadow

அதர்வாவின் ‘100’ பட போஸ்டர் வெளியீடு

நடிகர் முரளியின் மகனும், இளம் நடிகருமான அதர்வா ‘டார்லிங்’ இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இந்த போஸ்டரை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டரில் வெளியிட்டார்

முதல்முறையாக போலீஸ் வேடத்தில் அதர்ர்வா நடிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக முதன்முறையாக நடிகை ஹன்சிகா நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா சத்யா என்ற போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார். 100 என்பது காவல்துறைக்கான அவசர எண் என்பதால் அதையே தலைப்பாக வைத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply