அண்ணா அறிவாலயத்திற்கு வந்து சேர்ந்த கருணாநிதி சிலை

karunanidhi-statueசென்னை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதியின் புதிய வெண்கலச்சிலைகள் வந்தடைந்துள்ளது. இந்த சிலைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் பார்வையிட்டார். அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் சிலைகளை பார்வையிட்டனர்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்த அண்ணா சிலைக்கு பதிலாக புதிய வெண்கலச்சிலையும், அதன் அருகே கருணாநிதியின் சிலையும் வைக்க திமுக முடிவுசெய்தது. அதன்பின்னர் பழைய அண்ணா சிலை அகற்றப்பட்டது.

இந்த நிலையில் புதிய பொலிவுடன் அண்ணா சிலையும் கருணாநிதி சிலையும் இன்று காலை அண்ணா அறிவாலயத்திற்கு வந்து சேர்ந்தது. இந்த இரண்டு சிலைகளின் திறப்பு விழா வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பதும் இந்த சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி வருகை தரவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *