அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? மு.க.அழகிரி அதிரடி பேட்டி

திமுக தலைவராக வரும் 28ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மு.க.அழகிரி செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் அமைதிப்பேரணி ஒன்றை நடத்தவுள்ளார். இதில் அவர் தனது அரசியல் செல்வாக்கை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இன்று சென்னை வந்த மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘தலைவர் கலைஞரின் நினைவைபோற்றும் வகையில் சென்னையில் வருகிற 5-ந்தேதி அமைதி பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணிக்காக அண்ணா சாலையில் இருந்து அனுமதி கேட்டோம். ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக போலீசார் திருவல்லிக்கேணியில் இருந்து பேரணி நடத்த கூறி உள்ளனர்.

இந்த பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். என்னை தி.மு.க.வில் இணைப்பதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை.

தலைவர் கலைஞர் என்னிடம் எப்போது கூறுகிறாரோ? அப்போது எனது மனக்குமுறலை மக்களிடம் கூறுவேன். சென்னையில் நடைபெறும் அமைதி பேரணிக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *