அடிச்சா அடங்குற ஆளா நீ” நீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி இணையத்தில் கபாலி

kabaliசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனநிலையில் இந்த படம் இணையத்தில் வெளியாகாமல் இருக்க தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு நீதிமன்ற நடவடிக்கையில் இறங்கினார். சென்னை ஐகோர்ட்டும் விதிகளை மீறி இணையத்தில் திரைப்படங்களை வெளியிடும் நூற்றுக்கணக்கான இணையதளங்களை முடக்கியது.

ஆனால் அதற்கெல்லாம் அடங்குற ஆளா நமது இணையதளவாசிகள். ஒரு இணையதளத்தில் 110 நிமிடங்கள் ஓடக்கூடிய கபாலி படத்தின் தியேட்டர் பிரின்ட் வீடியோ வெளியாகி உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ள்து. இவ்வளவு பாதுகாப்பு, நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி இணையத்தில் படம் வெளியாகி இருப்பது, திரையுலகினர்களை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள ‘கபாலி’ படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன. முதல் பதினைந்து நிமிடங்களும், கடைசி இருபது நிமிடங்களும் மட்டுமே படம் விறுவிறுப்புடன் இருப்பதாகவும், திரைக்கதை மிக மெதுவாக இருப்பதாகவும், ரஜினி ரசிகர்கள் திருப்தியில்லாமல் தியேட்டரை விட்டு வெளியேறி வருவதாகவும் சமூக இணையதளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *