ajith and anushkaஅஜீத் 55 படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்ட அனுஷ்கா படப்பிடிப்பிற்கு சரியாக வராததால் கடுப்பான அஜீத், அனுஷ்காவை படத்தில் இருந்து நீக்கும்படி கவுதம் மேனனிடம் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

தெலுங்கில் அனுஷ்கா பாஹுபாலி, ராணி ருத்ரம்மா தேவி ஆகிய இரு மெகா பட்ஜெட் படங்களில் நடித்து வருவதால் மொத்தமாக பல மாதங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இடையிடையே ஓய்வு இருக்கும் நாட்களில் மட்டும் லிங்கா மற்றும் அஜீத் படங்களுக்கு கால்ஷிட் கொடுத்து வந்தார்.

இந்நிலையில் அஜீத் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே திடீர் திடீரென பாஹுபாலி இயக்குனரிடம் இருந்தும், ராணி ருத்ரம்மாதேவி இயக்குனரிடம் இருந்தும் போன் அழைப்பு வருவதால் கவுதம் மேனனிடம் மட்டும் பர்மிஷன் கேட்டு சென்றுவிடுவதாகவும், அஜீத்தை கண்டுகொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

எனவே அனுஷ்கா சம்மந்தப்பட்ட காட்சிகள் இதுவரை எதுவும் எடுக்கப்படவில்லை. சண்டைக்காட்சிகளும், அஜீத் சம்மந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளன.

இதனால் அதிருப்தி அடைந்த அஜீத், அனுஷ்காவை படத்தில் இருந்து நீக்கிவிட்டு வேறு கதாநாயகியை ஒப்பந்தம் செய்ய சொலியிருப்பதாகவும், அனேகமாக அந்த கேரக்டரில் த்ரிஷா நடிப்பார் என்றும் கோலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது.

ajith and anushka

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *