அஜித்-வித்யாபாலன் ஜோடியை இன்று திரையில் பார்க்கும் ரசிகர்கள்

அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவைடந்து தற்போது மற்ற பணிகள் நடந்து வரும் நிலையில் இன்று காலை 7.45 மணிக்கு இந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகவுள்ளது

‘வானில் இருள்’ என்று தொடங்கும் இந்த மெலடி பாடலை யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க, இந்த பாடலுக்கு அஜித், வித்யாபாலன் நடித்துள்ளனர். லிரிக் பாடலாக இருந்தாலும் இருவரும் இணைந்த வீடியோ காட்சிகளும் ஒருசில இன்று வெளியாகும் பாடலில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் முதல்முறையாக அஜித் ரசிகர்கள் இன்று அஜித்-வித்யாபாலன் ஜோடியை திரையில் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது

எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *