அஜித் பட பணியை ஸ்டார்ட் செய்த யுவன்ஷங்கர் ராஜா

அஜித் ,வித்யாபாலன் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் அனைத்து பணிகளையும் ஜூலை மூன்றாவது வாரத்திற்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இன்று முதல் இந்த படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளாராம். ‘பில்லா’, பில்லா 2, ஆரம்பம், ‘மங்காத்தா’ போன்ற படங்களின் பின்னணி இசை போலவே இந்த படத்தின் பின்னணி இசையும் அபாரமாக இருக்க வேண்டும் என்று யுவன்ஷங்கர் ராஜா மிகுந்த அக்கறை எடுத்துள்ளதாக தெரிகிறது

அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Leave a Reply