அஜித் படத்தை இயக்கவில்லை: பிரபல இயக்குனர் தம்பதிகள் பேட்டி

சமீபத்தில் மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் ‘விக்ரம் வேதா. இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில் விக்ரம் வேதா’ படத்தின் இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரியின் அடுத்த படத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் இந்த செய்தியை இயக்குனர் தம்பதிகள் மறுத்துள்ள்னர.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: “தற்போது அடுத்த படத்துக்கான கதையை உருவாக்கி வருகிறோம். எப்போதுமே நாங்கள் முழுமையாக கதை தயாரானவுடன் தான் நடிகர்களை அணுகும் பழக்கமுடையவர்கள்.

இதுவரை நாங்கள் கதையையே இறுதி செய்யவில்லை. அப்படியிருக்கும் போது அஜித் சார் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளோம் என்ற செய்தியில் உண்மையில்லை. எங்கியிருந்து இப்படியொரு செய்தி உருவானது என்பதே தெரியவில்லை” என்று தெரிவித்தனர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *