shadow

அஜித் படத்திற்கு முன் விக்ரமை இயக்கும் பிரபல இயக்குனர்

அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித் படத்தை இயக்குவதற்கு முன் விக்ரம் நடிக்கும் படம் ஒன்றை குறுகிய காலத்தில் இயக்க எச்.வினோத் திட்டமிட்டுள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. விக்ரம் தற்போது ‘சாமி 2’ மற்றும் ‘துருவ நட்சத்திரம்’; ஆகிய படங்களின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்துவிட்டதால் ஒரே ஷெட்யூலில் இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித் படத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளை பார்த்து கொண்டே, விக்ரம் படத்தை ஹெச்.வினோத் முடித்துவிடுவார் என்றும், இந்த இரண்டு படங்களும் ஹெச்.வினோத் மார்க்கெட்டை உச்சத்திற்கு அழைத்து செல்லும் என்றும் கூறப்படுகிறாத்

அஜித், விக்ரம், ஹெச்.வினோத், விசுவாசம், சாமி 2

Is it Vikram before Ajith?

Leave a Reply