shadow

அஜித் நண்பருக்கு அழைப்பு விடுத்த ‘மெர்சல்’ குழுவினர்

இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள கிராண்ட் ரெக்ஸ் சினிமாஸ் திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.

கபாலி, பாகுபலி 2 படங்களை அடுத்து திரையிடப்படவுள்ள தமிழ் படம் ‘மெர்சல்’ தான் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த தியேட்டரில் திரையிடப்படும் முதல் காட்சிக்கு உலகெங்கிலும் உள்ள பிரபலங்களுக்கு ‘மெர்சல்’ அழைப்பு விடுத்துள்ளது.

அந்த வகையில் அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து அதன் பின்னர் அஜித்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக மாறிவிட்ட பிரபல ஹாலிவுட் நடிகர் செர்ஜ் குரோசன் (Serge Crozon) அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். இந்த தகவலை செர்ஜ் குரோசன் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *