அஜித்துக்கு ஜோடியாகும் திருமணமான நடிகைகள்

விஜய், சூர்யா நா மாஸ் நடிகர்கள் அனைவரும் இளம் நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அஜீத் மட்டும் திருமணமான நடிகைகளுடன் ஜோடி சேர்வது அவரது ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாகி வருகிறது.

நேர்கொண்டபார்வை படத்தில் திருமணமான வித்யாபாலன் ஜோடியாக நடித்த நிலையில் தற்போது வலிமை படத்தில் நஸ்ரியா நசீம் ஜோடியாக நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

நஸ்ரியா நசீம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

திருமணத்திற்கு பின் திரையுலகில் இருந்து விலகியிருந்த அவர் வலிமை படத்தில் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply