அஜித்தின் ‘வலிமை’ படத்திற்கும் விஜய்சேதுபதி வில்லனா?

தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 64 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருக்கும் நிலையில் தற்போது அஜித்தின் அடுத்த படமான வலிமை திரைப்படத்திலும் அவர் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இயக்குனர் எச்.வினோத்தின் வலிமை திரைக்கதையில் வில்லன் கேரக்டர்தான் வலிமையாக இருப்பதாகவும் எனவே அந்த கேரக்டருக்கு ஒரு பிரபல ஹீரோ இருந்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்று அவர் எண்ணுவதாகவும் இதனை அடுத்து அவரது தரப்பினர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டால் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அஜித் கூறியதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது

இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று விஜய் சேதுபதி வலிமை படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் ஒரே நேரத்தில் அஜித் மற்றும் விஜய் ஆகிய இரண்டு பெரிய மாஸ் நடிகர்களின் படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை அவர் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply