Chennai Today News

அஜித்தின் அடுத்த படத்தில் சாயிஷா?

அஜித்தின் அடுத்த படத்தில் சாயிஷா?

அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் ‘விசுவாசம்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் வரும் செப்டம்பருக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை ‘சதுரங்க வேட்டை இயக்குனர் எச்.வினோத் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணியை எச்.வினோத் ஆரம்பித்துவிட்டதாகவும், இந்த படத்திற்காக சாயிஷாவிடம் அவர் கால்ஷீட் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரபூர்வ செய்தி வெளிவரும் வரை பொறுமை காப்போம்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!