shadow

ஃப்ரூட்ஸ் மாக்டெயில்

தேவையானவை: மாதுளை முத்துகள், விதை நீக்கிய சாத்துக்குடி, சப்போட்டா, ஆப்பிள், தர்பூசணி, கிர்ணிப்பழம் கலவை – 2 கப், ஐஸ் கட்டிகள் – தேவைக்கேற்ப, தேன், சர்க்கரை – சிறிதளவு.

சிரப் செய்ய: சர்க்கரை, தண்ணீர் – தலா 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பழக்கலவையை அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். சர்க்கரை, தண்ணீர் இரண்டையும் சேர்த்து அடுப்பில் வைத்து கரையவிடவும். குமிழ்கள் வரும்போது அடுப்பை அணைத்துவிடவும். சர்க்கரை சிரப் தயார்.

ஒரு தட்டில் சிறிதளவு சர்க்கரையைத் தூவி ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்து, அதன் விளிம்பில் தேன் தடவி, சர்க்கரை தூவிய தட்டின்மேல் டம்ளரை கவிழ்த்து, மெதுவாகச் சுழற்றவும். கண்ணாடி டம்ளர் விளிம்பில் சர்க்கரை படிகமாக உருவாகும். இந்த டம்ளரில் ஜூஸை ஊற்றி உடன் சர்க்கரை சிரப் சேர்த்து, ஐஸ் கட்டிகள் போட்டுப் பரிமாறவும்.

Leave a Reply