ஃபேஸ்புக் பதிவை ஆதாரம் காட்டி விவாகரத்து பெற்ற 19 வயது பெண்

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிஷ்னோ என்ற 12 வயது சிறுமிக்கு கடந்த 2010ஆன் ஆண்டு கட்டாய குழந்தை திருமணம் நடந்தது தற்போது அந்த சிறுமி 19 வயது இளம்பெண்ணாக உள்ளார்.

மேலும் தனது கணவர் குடிகாரராக இருப்பதாலும் தான் சிறுமியாக இருக்கும்போதே தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த்தாலும் தனக்கு விவாகரத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவரின் உதவியுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

ஆனால் அவருக்கு குழந்தை திருமணம் நடந்ததாக ஆதாரம் எதுவும் இல்லை என நீதிமன்றம் கூறியது. அப்போது கணவனின் ஃபேஸ் புக்கில் அவருக்கு அவருடைய நண்பர்கள் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட பதிவுகளை பிஷ்ணோ நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பித்தார். இந்த ஆதாரங்களை ஏற்றுக்கொண்டநீதிமன்றம் பிஷ்ணோவின் திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *