shadow

ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன்களை உருவாக்க சாம்சங் காப்புரிமை

சாம்சங் நிறுவனம் சார்பில் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் டிரேடிஷனல் யுனிட்களின் ஃபிரேம்களில் ஆன்டெனா பேண்ட்களை பொருத்துவதற்கென பல்வேறு காப்புரிமைகள் கோரப்பட்டுள்ளது. கொரிய அறிவுசார் காப்புரிமை தகவல் மையத்தில் சாம்சங் நிறுவனம் காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது.

சாம்சங் சார்பில் பதிவிடப்பட்டுள்ள காப்புரிமைகளில் சாம்சங் நிறுவனம் பல்வேறு வடிவமைப்புகளை கொண்டு கேலக்ஸி S9 ஸ்மார்ட்போன்களை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போனின் ஃபிரேமில் ஆன்டெனா பொருத்த வெவ்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது.

காப்புரிமைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு வழிமுறைகள் உண்மையில் செயல்படுத்த முடியுமா என்ற வகையில், சாம்சங் அனைத்து வழிமுறைகளையும் முயற்சி செய்ய திட்டமிட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி S9 சீரிஸ் வடிவமைப்பு சார்ந்து எவ்வித தகவலும் உறுதி செய்யப்படாத நிலையில், சாம்சங் ஆன்டெனா மற்றும் சென்சார்களை ஃபிரேமில் பொருத்த வெவ்வேறு வழிமுறைகளை கையாண்டு வருவது மட்டும் தெரியவந்துள்ளது.

புதிய வடிவமைப்பு வழிமுறைகளின் மூலம் சாம்சங் நிறுவனம் ஐபோன் X போன்ற வடிவைப்புகளை முன்பக்கம் வழங்குவதை தவிர்க்க முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. முந்தைய சாம்சங் S சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் சாம்சங் நிறுவனம் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேக்களை அறிமுகம் செய்திருந்த நிலையில், இம்முறை இதே அம்சம் மேம்படுத்தப்படுவது மட்டும் உறுதியாகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் 5.8 இன்ச் மற்றும் 6.2 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படும் என்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், பிரெஷர் சென்சிட்டிவ் ஹோம் பட்டன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் மற்றும் கேலக்ஸி எக்ஸ்பீரியன்ஸ் U.I வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply